மரநாய்

The following is the translated version of a section in an article titled "What Life has Taught Me" at a symposium held at Bharatiya Vidya Bhavan around 1963-64. The article is based on an interview given by Paramacharya, where he talked about his personal life.

It is not clear whether the article was published in Bhavan's Journal subsequentlly. The reference shown here is from the book "Sage of Kanchi" by TMP Mahadevan.

What Life Has Taught Me, Series IT(?), Bharatiya Vidya Bhavan, Bombay, 1964, pp. 1-9.

மரநாய்

ஸ்வாமிநாதனுக்கு அப்போது சுமார் மூன்று வயது இருக்கும். நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் ஏதோ சப்தம்! என்னவென்று புரியவில்லை! வீட்டுப் பெரியவர்கள் முழித்துக் கொண்டு விளக்கை சற்று பெரிசு பண்ணிக் கொண்டு, ஆளுக்கொரு விளக்கோடு என்னமோ ஏதோவென்று இங்கேயும் அங்கேயும் போனார்கள்.

அப்போதெல்லாம் எல்லா வீடுகளிலும் வாசல், ரேழி, கூடம், பின்கட்டு, அப்புறம் ரொம்பத் தள்ளி பாத்ரூம் இருக்கும். ஆனால் சப்தம் என்னவோ பின்கட்டுக்குள் சாமான்கள் போட்டு வைக்கும் அறைக்குள்ளிருந்து அல்லவோ வருகிறது. 'கொட கொட' வென்று ஏதோ பாத்திரத்தை உருட்டும் சப்தம்! ஆனால் யாரோ மனிதர்கள் நடமாடுவது போல் சப்தம் இல்லை. இங்கே விளக்கின் வெளிச்சமும், காலடி, பேச்சு சப்தமும் கேட்டு, அக்ரஹாரத்தில் எல்லாருமே ஏறக்குறைய முழித்துக் கொண்டு ஸ்வாமிநாதனின் வீட்டுக்குள் இருந்தனர்.

இரவு பூரா ஒரே அறைக்குள் பாத்திரத்தை உருட்டி லூட்டி அடிக்கும் நவீனத் திருடனைப் பிடிக்கவும், பார்க்கவும் கூட்டம் கூடியது. ஸ்வாமிநாதனும் அம்மாவின் புடவைத் தலைப்பைப் பிடித்துக் கொண்டு, எதுவும் புரியாமல்!![அவனுக்கா புரியாது?] நின்று கொண்டிருந்தான்.

கையில் கோலுடன் ரெண்டு மூன்று பேர் ஸாமான் இருக்கும் அறையைத் திறந்து கொண்டு உள்ளே விளக்கோடு நுழைந்து பார்த்தால், மஹா கண்ணராவியான, பரிதாபமான காட்சி!

எறும்பு வராமல் இருக்க, மேலே உறியின் மேல் ஒரு தோண்டிக்குள் வெல்லத்தை வைத்திருகிறார்கள். ஏதோ பொந்து வழியாக அந்த அறைக்குள் நுழைந்த ஒரு மரநாய், வெல்லத்தை மோப்பம் பிடித்து எப்படியோ உறியை எட்டி, அந்தத் தோண்டிக்குள் தலையை விட்டு வெல்லத்தை ருசி பார்த்திருக்கிறது. பாவம்! அதன் தலை அதற்குள் மாட்டிக் கொண்டதால் வெளியே எடுக்க முடியாமல் தோண்டியோடு கீழே விழுந்து, அங்குமிங்கும் பயந்து ஓடி, தலையை வெளியில் எடுக்க ப்ரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தது.

உள்ளே நுழைந்த வீட்டார்க்கு, மரநாயின் தலையை எப்படி வெளியே எடுத்து விடுவது? என்பது ஒரே ப்ரச்சனை! யாராவது மரநாயை உடல்பக்கம் பிடித்துக் கொண்டால், இன்னொருத்தர் தோண்டியை இழுத்தால், விடுவித்துவிடலாம். எடுத்ததும் கடித்துவிட்டால்?

ஸ்வாமிநாதனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரேயடியாகப் புரியாமலும் இல்லை. மஹா தீக்ஷண்யமான புத்தி! நள்ளிரவிலிருந்து தூங்காமல் இருந்தாலும், கொட்டக் கொட்ட முழித்துக் கொண்டு இருக்கிறது. பின்னாளில் "குடாகேசனாக" பக்தர்களுக்காக இரவு பகல் தூங்காமல் எத்தனை நடை, எத்தனை அனுக்ரஹம், எத்தனை அனுஷ்டானம்!!!

மனது மட்டும் 'வெதுக்கு வெதுக்கு' என்று அடித்துக் கொள்கிறது. உள்ளுக்குள் ஏதோ ஒன்று இறுக்கிப் பிடித்து அழுத்தமாக நெறிக்கிறது. அப்போதே அத்வைதானுபவம்!! ஆம். "மரநாய்க்கும் தோண்டிக்குள்ளே மட்டிண்டா, இப்டித்தானே இறுக்கமா இருக்கும்?" என்ற கவலை. அப்போதிலிருந்தே சகல ஜீவராசிகளுக்காகவும் கவலைப் பட ஆரம்பித்துவிட்டான் ஸ்வாமிநாதன்.

"இப்போ எடுக்கவே வராத தலையை, அப்போ மட்டும் எப்டி இவ்ளோவ் ஆழமா விட்டுது?" தனக்குத்தானே கேட்டுக் கொண்டது. உள்ளிருந்து பதிலும் வந்தது.... "வெல்லத்து மேல இருந்த ஆசைனாலதான்!"

அதுக்காக சித்திரவதைப்பட்டு, உயிரைக் கூட பணயம் வெச்சிடுத்து! இதுக்கெல்லாம் மூலக் காரணம், சபலம்! ஆசை!பேராசை! இந்த மரநாயின் சபலத்துக்காக, அதுவும் கஷ்டப்பட்டுக்கொண்டு, இரவு நேரத்தில் அக்ரஹாரத்தில் அத்தனைபேருடைய தூக்கத்தையும் கெடுத்திருக்கிறது.

ஒருவழியாக மரநாயிடம் கடிபடாமல், அதன் தலையை விடுவிக்க உபாயம் செய்தார்கள். அதை ஒரு தூணோடு சேர்த்துக் கட்டிவிட்டு, அந்தத் தோண்டியை ஒரு கயிற்றால் கட்டி, tug of war மாதிரி, இழுக்கவும், அப்பாடா! பட்டென்று தோண்டி தனியே வெளியே வந்து, மரநாய் நன்றாக மூச்சுவிட முடிந்தது! அதை மெல்ல கயிற்றோடு எங்கோ தொலைவுக்குக் கொண்டு சென்று, அவிழ்த்துவிட்டார்கள். தப்பித்தேன்!பிழைத்தேன்! என்று ஓடியது. மீண்டும் வராமலா இருக்கும்? ஆசை என்ன அவ்வளவு சுலபமாக போய்விடுமா?

கொஞ்சநேரம் அதைப் பற்றியே பேச்சாக இருந்தது, அப்புறம் அவரவர் படுக்கப் போய்விட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை, இது ஒரு ஸாதாரண நிகழ்வு! மீண்டும் அந்த மரநாய் இங்கேயோ, வேறு எங்கேயோ மாட்டிக் கொண்டால், அதை விடுவிக்க அவர்களுக்கு இப்போது ஒரு உபாயம் தெரிந்திருக்கிறது. அவ்வளவுதான். மரநாயும் நாமும் ஒன்றுதான்! எத்தனை அடிபட்டாலும், புத்தி வராமல், பாடம் கற்றுக்கொள்ளாமல் மீண்டும் மீண்டும் மாட்டிக் கொண்டு அவஸ்தைப்பட மட்டுந்தான் தெரியும்.

ஆனால் ஸ்வாமிநாதன்? சூடான மெழுகில் விழுந்த பூச்சி, அதற்குள் மூழ்கிவிடுவது போல், இந்த நிகழ்ச்சி அதன் மனஸில் ஆழமாகப் பதிந்தது. மரநாய், வெல்லம், தோண்டி எல்லாம் மறந்து விடலாம். ஆனால், அந்த நாய் ஓடிய ஓட்டம், மூச்சுவிடமுடியாமல் பட்ட அவஸ்தை இதை ஸ்வாமிநாதனால் மறக்க முடியவில்லை.

பின்னாளில் ஸ்வாமிநாதன் ஆச்சார்யபீடத்தில் அமர்ந்தத போது, மரநாய் நிகழ்ச்சியின் ஆழத்தை, பாடத்தை பால ஸன்யாஸி வெகு அழகாக கற்றுக் கொண்டு அப்யஸிக்கவும் செய்தார். சபலம், ஆசை, பேராசை, பந்தம், பாசம், புலம்பல் எதுவுமே தம்மைச் சூழாதபடி காத்துக் கொள்ள ஹேதுவாக இருந்தது. மாறாக, இந்த விஷயங்களில் தன்னைப் பாறாங்கல் மாதிரி ஆக்கிக் கொண்டார்